TRAINING KIT

இலக்கை அடைவதின் வெற்றி ரகசியம்

நியூயார்க் நகரின் 'Planet Hollywood' சுவரில் SECRET என்ற முத்திரையுடன் தொங்க விடப்பட்டுள்ள கடிதம் -- உலகப் புகழ்பெற்ற நடிகர், தற்காப்புக்கலை நிபுணர் புரூஸ்லீ தனக்குத்தானே எழுதிக்கொண்ட ஒன்றாகும். 1970 ஆம் தேதியிட்ட அந்த கடிதம் இப்படி ஆரம்பிக்கிறது. "1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிறந்த அறியப்பட்ட ஓரியன்டல் திரைப்பட நடிகராக நான் இருப்பேன் மற்றும் 10 மில்லியன் டாலர்கள் ஏற்படுத்தி இருப்பேன்". இந்த கடிதத்தின் சுவாரஸ்யமான பகுதி - மற்றும் நம் கனவுப்பயணங்களில் அதிகம் தவிர்க்கப்படுவதும் - இதன் இரண்டாவது பகுதியே. லீ இவ்வாறு தொடர்ந்து எழுதுகிறார். "இதன் பொருட்டு நான் கேமரா முன் நிற்கும் ஒவ்வொரு கனமும் என்னால் முடிந்த அளவிலான மிகச்சிறந்த நடிப்பை கொடுப்பேன். மேலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்வேன்." என்னே ஓர் முழுமையான வாழ்வின் விளைவுக்கூற்று.!!


மற்றுமோர் சரித்திரம்:

தாமஸ் எடிசன் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தனது அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தனது பெயரில் ஆயிரக்கணக்கான பேடன்டுகள் வைத்துள்ளார். அவன் துறுதுறு பையனாக , பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டு - தன் அம்மாவிடம் வீட்டுக்கல்வி முறையில் பயின்றவர்.எடிசனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு மின்சார பல்ப் என்றறிவோம். அவர் ஆயிரக்கணக்கான முறைகளை பயன்படுத்தி தோல்வியுற்றும், அவரின் விடாமுயற்சியை பற்றி அவரின் பிரபல வார்த்தைகள், "நான் தோற்று விடவில்லை. ஆனால் தோல்வியுறக்கூடிய 10000 வழிகளை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளேன்."

இலக்குகள் இரு வகைகளாம்! பொருள் இலக்கு மற்றும் செயல்முறை இலக்கு. பொருள் இலக்கு என்பது 'நான் இந்த ஆண்டு Z.M. Club க்கு தகுதி பெறுவேன்' அல்லது 'கோட்ட அளவில் #1 இடத்தை பெறுவேன்' என்பன போன்ற நாம் அடைய இறுதி வெற்றி இலக்காகும்.

செயல்முறை இலக்கு என்பது நமது வெற்றி இலக்கை அடைந்திட நாம் தினசரி நடைமுறையில், நமது தினசரி வேலைத்திட்டத்தில் செயல்படுத்திட வேண்டிய - நம் "செயல்திட்ட அறிக்கை" ஆகும். இந்த செயல் இலக்கையே- மேல் நிலை விளையாட்டு வீரர்கள், வெற்றிகரமான வணிக மக்கள் மற்றும் அனைத்துத் துறை சாதனையாளர்களும், தங்கள் தினசரி வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக்கிக்கொண்டு - குறிப்பிட்ட கால இடைவெளியில் சீர் தூக்கியும் பார்த்து கொள்வர்.


நம் முகவர்கள் காதல் கொண்டிட வேண்டியதாவது:-

தாங்கள் அடைந்திட வேண்டிய பொருள் இலக்கு பற்றியல்ல; மாறாக அதனை அடைவதற்கு நாம் உட்படுத்த வேண்டிய "செயல்முறை இலக்கே" ஆகும். வெற்றியாளர் அனைவரும் தம் தொழிலை காதல் கொள்கிறாரோ இல்லையோ, அவர் தம் செயல்முறை மதிப்பளிப்பவராய் இருப்பர்.


கோட்ட அளவில் மட்டுமல்லாது உலக அளவில் தலை சிறந்த காப்புறுதி ஆலோசகராக வளரும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த உயர்வு நாம் நம் வாழ்க்கையில் சாதித்தால் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும், நமது சமுதாயத்திற்கும் பெரிய நன்மைகள் வந்து சேரும். இதையே நோக்கமாகக் கொண்டு இந்த Goal-Seeing workshop வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Roadmap to Business Sucess:-

’ஞாலம் கருதினும் கைகூடும்’ என்றார் வள்ளுவர். அப்படிக் கைகூடுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?